சென்னையில் ஊரடங்கை மீறி சில இளைஞர்கள் பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுப்பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு ஊரடங்கை அறிவித்து மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கண்ணகிநகர் பகுதியை சேர்ந்தச் இளைஞர் ஒருவருக்கு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுமார் 15 இளைஞர்கள் ஒன்று கூடி இரண்டு பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
இதனை சக நண்பர்கள் அவர்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அது தற்பொது சமூக வலைதளங்களில் பரவி வைரலாக வருகிறது. இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வலம் வரும் இந்த வீடியோவில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து கண்ணகிநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணாக கடந்த சில மாதங்களாக இதுபோன்று பட்டாக் கத்தியில் கேக் வேட்டும் கலாச்சாரம் காணாமல்போன நிலையில், இது மீண்டும் தொடங்கியுள்ளது.







