முக்கியச் செய்திகள் சினிமா

பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்; விளக்கம் அளித்த விஜய்சேதுபதி!

பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டமாக பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக அவர் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் அதில், ‘3 நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்தநாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பரந்தூர் விமான நிலைய விவகாரம் – அன்புமணி கருத்து

Web Editor

அதிமுக அலுவலக சாவி இன்று ஒப்படைப்பு – பலத்த பாதுகாப்பு

Web Editor

சென்னை கண்ணகி நகரில் கூடுதல் பள்ளிகள் கட்டித்தரப்படும் – திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்

Jeba Arul Robinson

Leave a Reply