மகாராஷ்டிராவில் நடந்த வரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் ரூ.56 கோடி ரொக்கம் மற்றும் ரூ.14 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம், முத்துக்கள் மற்றும் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு தொடர்பாக மகாராஷ்டிராவின் ஜல்னாவில் சில வணிகக் குழுக்களுடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது சுமார் ரூ.390 கோடி “பினாமி” சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் ரூ.56 கோடி ரொக்கம் மற்றும் ரூ.14 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம், முத்துக்கள் மற்றும் வைரங்களும், சில சொத்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகளையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘அமமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம்’
எஃகு, ஆடை மற்றும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபடும் இரண்டு வணிகக் குழுக்களுடன் தொடர்புடைய குடியிருப்பு மற்றும் அதிகாரப்பூர்வ வளாகங்களில் ஆகஸ்ட் 1 முதல் 8 வரை சோதனைகள் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தை கணக்கிட அதிகாரிகளுக்கு சுமார் 13 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. மேலும், சோதனை நடவடிக்கைக்காக மாநிலம் முழுவதும் இருந்து 260 அதிகாரிகளைக் கொண்ட ஐந்து குழுக்களை அமைத்து. இந்த நடவடிக்கையில் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








