விடுதியில் மாணவி மரணம் – டி.சி வாங்கிச்சென்ற மாணவிகள்

திருவள்ளூர் அருகே விடுதியில் மாணவி உயிரிழந்த பள்ளியில், ஒரே நாளில் 23 மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த 12ம்…

திருவள்ளூர் அருகே விடுதியில் மாணவி உயிரிழந்த பள்ளியில், ஒரே நாளில் 23 மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 25ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்ததையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், விடுதிக் காப்பாளர்களை தொடர்ந்து, மாணவிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் மாணவியுடன் விடுதியில் தங்கி படித்த 23 மாணவிகள், பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி சொந்த ஊர் சென்றனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவிகளிடம் உள்ள அச்சத்தை போக்கும் வகையில், மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.