சிங்காரச் சென்னை 2.0 பாணியில் மன்னார்குடி நகரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மின்னும் மன்னை திட்டத்திற்கும் முதலமைச்சர் முழு ஆதரவை தருவார் என திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து சிறப்பான துவக்க ஆட்டக்காரராக முதலமைச்சர் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
இனிமேல் தமிழ்நாடு டெல்லியில் நெஞ்சை நிமிர்த்தி போராடும் என கூறி அவர் மேலும், சிங்காரச்சென்னை 2.0 திட்ட பாணியில், மன்னார்குடி நகரின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மின்னும் மன்னை திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு ஆதரவை தரவேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவையில் எப்படி பேசவேண்டும் என அரைமணி நேரம் முதலமைச்சர் லெக்சர் எடுத்துள்ளார் எனக்கூறினார். மேலும், நேரடி கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுபவர்களின் சம்பளம் குறைவாக இருப்பதாகவும் அதனை உயர்த்தி தரவேண்டும் எனவும் அவர் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.







