தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் அதிகாரி

சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்குப் பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில்…

சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்குப் பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.


தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் கூட்டணி, வேட்பாளர்கள் நேர்காணல் என அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில் தேர்தல் நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக் குறிப்பில், வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி, வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம், உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், வாக்காளர் பதிவு சீட்டில் இம்முறை வாக்காளர் புகைப்படம் இடம்பெறாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, தகவல் சீட்டுகளை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும், என மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.