அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளில் 77 இடங்களில் பாஜக முன்னனியில் உள்ளது.
அசாமில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமாக 337 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 25 சதவிகிதம் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
அசாமில் இன்று காலை முதலே வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மதியம் நிலவரப்படி பாஜக 77 தொகுதிகளிலும் முன்னனியில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் முன்னனியில் உள்ளது.
பாஜக வெற்றிபெற்றால் அசாமில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







