அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள திடாபோர் போகாஹோலா பாகிசாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மேடையில் நடனமாடி மக்களை உற்சாகப்படுத்தினார்.
ஜோர்ஹாட் நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தோபோன் குமார் கேகோயை ஆதரித்து பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் சர்மா பிரபலமான ஜுமுர் பாடலுக்கு உற்சாகமாக கைதட்டி நடனமாடினார்.
மக்களவைத் தேர்தலில் அசாமில் மொத்தமுள்ள 14 இடங்களில் பாஜக 11 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான அசோம் கண பரிஷத்(ஏஜிபி) 2 இடங்களிலும், பார்பேட்டா மற்றும் துப்ரி, யுபிபிஎல் ஆகிய கட்சிகள் ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றனர்.
அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது.







