7-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் சூப்பா் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சூப்பர்4 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதன் படி, டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் குவித்துள்ளாது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 58 ரன்கள் விளாசினார். மற்றொரு ஆட்டகாரரான சைம் அயூப், முகமது நவாஸ் மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் முறையே 21,21,20 ரன்கள்
அடித்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 172 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடவுள்ளது.







