முக்கியச் செய்திகள் உலகம்

பணத்தை அள்ளிக் கொண்டு தப்பி ஓடினாரா? ஆப்கான் அதிபர் விளக்கம்

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, பணத்தை அள்ளிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதால், அங்கு
தலிபான்களுக்கும் அரசு படைக்கும் போர் மூண்டது. பல மாகாணங்களை எதிர்ப்பின்றி கைப்பற்றி வந்த தலிபான்கள், காபூல் நகரை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு தப்பினார். அவர் தஜிகிஸ்தான் தப்பியதாகக் கூறப்பட்டது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத் தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுள்ள அஷ்ரப் கனி, தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதை உறுதிப்படுத்தினார். அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது, விமானப்படை தளத்துக்கு 4 கார்கள் நிறைய பணத்துடன் வந்ததாகவும் அதை அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றதாகவும் வெளியான புகாரை அவர் மறுத்துள்ளார். அது திட்டமிட்ட பொய் என்று தெரிவித்துள்ள அவர், பேரழிவுகளைத் தவிர்ப்பதற்காகவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகவும், விரைவில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு நன்றி என்றும் தலிபான்களுடன் ஆப்கான் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த சேலம் அதிமுகவினர்!

G SaravanaKumar

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Arivazhagan Chinnasamy

‘கடலூர் மருத்துவக் கல்லூரியில், நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது’

Arivazhagan Chinnasamy