முக்கியச் செய்திகள் தமிழகம்

வனத்துறை ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் மீட்கப்படும்: அமைச்சர் உறுதி

வனத்துறைக்கு சொந்தமான அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களும் விரைவில் மீட்கப்படும் என சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.

வனத்துறைக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்றகுழு தலைவர் செல்வப் பெருந்தகை கோரிக்கை விடுத்ததற்கு வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் பதிலளித்து பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, ஆக்கிரப்பு நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களாகவும், குடியிருப்பு களாகவும் இருப்பதாக விளக்கம் அளித்த அவர், ஆக்கிரமிப்புகளை கண்காணிக்கவும், அகற்றவும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் மேகமலையில் உள்ள வன உயிரின கோட்டத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 ஆயிரம் ஹெக்டர் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும், தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கிய செயல்திட்ட அறிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் க.ராமச்சந்திரன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக் படகு போட்டியில் தகுதி பெற்ற முதல் தமிழக வீராங்கனை!

தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை – எம்.பி. கனிமொழி

Web Editor

800 கோடியை தொட்ட உலக மக்கள் தொகை…11 ஆண்டுகளில் 100 கோடி உயர்ந்தது…

Web Editor