முக்கியச் செய்திகள் இந்தியா

அசாமில் வெள்ளத்தால் தவித்து வரும் 55லட்சம் மக்கள்!

அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழையால் 55 லட்சதுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 34
மாவட்டங்களில் ஏறத்தாழ 5000 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் நேற்றைய தினம் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் அளவு அதிகரித்துள்ளதால் புதிதாக இன்னும் பல நூறு கிராமங்களும் வெள்ளத்தில்
மூழுகியுள்ளதாக இன்று தகவல் வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 55 லட்சமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் மழையாலும் வெள்ளத்தாலும் இதுவரை இதுவரை 89 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகூன் பகுதிகளுக்கு ரயில் மூலமாக பயணம் செய்து நேரில் சென்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ்  நிலவரங்களை ஆராய்ந்தார்  . இந்த பகுதியில் மட்டும் 4 லட்சத்தி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர், “ கவுஹாதியில் இருந்து ரயில் மூலமாகவே சென்றதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிக அருகில் கூர்ந்து பார்க்கமுடிந்தது. இதனைத்தொடர்ந்து வெள்ளத்திலிருந்து மக்களை மீட்கவும், நிவாரணங்களை வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட்ட மேற்படிப்புகள் இந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும்: வெங்கைய்யா நாயுடு

Niruban Chakkaaravarthi

குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் குறித்து தகவல்கள் ஏதும் மத்திய அரசிடம் இல்லை: இணை அமைச்சர் ஹவுசில் கிஷோர்

Saravana Kumar

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று முடிவு!

Nandhakumar