இருசக்கர வாகனத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

இருசக்கர வாகனத்தில் சென்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கைவிடப்பட்ட குவாரிகளில் மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு செய்தது அப்பகுதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர்…

இருசக்கர வாகனத்தில் சென்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கைவிடப்பட்ட குவாரிகளில் மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு செய்தது அப்பகுதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதிக்குட்பட்ட திரு வக்கரை பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் கல்குவாரிகள் குறித்துத் தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் வானூர் பகுதிக்குச் சென்ற போது, குவாரிகளுக்கு செல்லும் பாதைகள் கரடு முரடாக இருந்துள்ளது. இதனால், பயணத்தை நிறுத்தாமல், பயண வாகனத்தை மாற்றி ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘அன்னபூரணி அம்மாவின் அவதார திருவிழா; காலில் விழுந்து ஆசி பெற்ற பக்தர்கள்’

குவாரிகளுக்கு செல்லும் பாதையில் இருசக்கர வாகனம் எளிமையாகச் செல்லும் என்பதால், அவர் இரண்டு சக்கர வாகனத்தைத் தேர்வு செய்து, இருசக்கர வாகனத்தில் சென்று கைவிடப்பட்ட குவாரிகளில் மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு செய்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.