திருவள்ளூர் அருகே 10 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் பேருந்துக்கு வாழைமரம் தோரணம் கட்டி பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து மாதவரம் ஆமூர் குதிரை பள்ளம் வழியாக செங்குன்றத்திற்க்கு தடம் எண் 41என்ற பேருந்து சேவை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இது குறித்து நியூஸ் 7 தமிழ் தெருகுரல்
செய்தி வெளியானதை தொடர்ந்து செய்தியின் எதிரொலியாக பொதுமக்களின்
கோரிக்கையை ஏற்று மீண்டும் பேருந்து சேவையானது இன்று துவக்கப்படது .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேருந்தை அலங்கரித்து வாழைமரம் கட்டி மீண்டும் பால் வளதுறை அமைச்சர் சாமு
நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பழைய பேருந்து என்பதால் கிராமத்து சாலையில் செல்வதற்கும், பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும், பேருந்தை முறையாக பாராமரிக்க வேண்டும் எனவும் போக்குவரத்துறை அதிகாரிகளை அமைச்சர் சாமு என பேருந்து இயக்கி வைத்த பின் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை பால்வளத் துறை அமைச்சர் நாசர் அறிவுரை கூறினார்.
மேலும் சாலை இரு புறங்களிலும் முட்புதர்களை அகற்றி தாழ்வாக உள்ள
மின்கம்பிகளை முறைப்படுத்தி பேருந்து முறையாக தடையின்றி இயங்க நடவடிக்கை
எடுக்க பொன்னேரி போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் அந்த பேருந்திலேயே கிராமங்களுக்கு பயணித்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன், சோழவரம் ஒன்றிய குழுத்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
பேருந்துக்கு பட்டாசு வெடித்தும் கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும் பூசணிக்காய்
உடைத்தும் உற்சாகமாக வரவேற்று இனி ப்புவழங்கி சால்வை அணிவித்தும் மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் மகாத்மா
காந்தி தேசிய ஊரக நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்கள் ஆக மாற்ற வேண்டும் என்றும் சுடுகாடு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
நியூஸ்7 தமிழ் தெருக்குரல் செய்தி எதிரொலி காரணமாக உடனடியாக பேருந்து சேவையை துவக்கிய அரசுக்கும் நியூஸ் 7 தமிழ்க்கும் மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.