சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரு முதலாளிகளுக்கு ஒரு சட்டம் வங்கிகளில் உள்ளதா..? என வங்கிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வில் வங்கிக்கடன், வீட்டுக்கடன் , தொழிற்சாலைக்கடன் குறித்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இதில் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் தாங்கள் வங்கியில் வாங்கிய கடனுக்காக, வங்கி விற்பனை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பெயரில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். மேலும் உரிய தொகையை கட்ட எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர் . இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வங்கிகளுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் தெரிவித்ததாவது.
இதையும் படிக்க: அரசு செயலாளர்கள் மாதந்தோறும் குறைந்தது 2 மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு நடத்த வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்
” தற்போது வங்கிகள் கடன் வாங்கி திரும்ப செலுத்தும் வாடிக்கையாளர்கள் கடன் கேட்டால் கடன் கொடுப்பதில்லை. மாறாக ஏமாற்று வேலை செய்ய கூடியவர்களுக்குத்தான் கடன் கொடுக்கிறார்கள். வங்கி மேலாளர்களும் இதற்கு துணை போகிறார்கள். வங்கிகள் நியாயமாக செயல்படுவதில்லை.
மேலும், வாடிக்கையாளர்கள் இரண்டு கோடி ரூபாய் கடன் கட்ட வேண்டிய சூழலில், 20 லட்சம் 30 லட்சம் குறைத்து கட்டுகிறேன் என்றால் வங்கி மேலாளர்கள் ஒத்துக் கொள்வதில்லை. அதே நேரம் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் பாதி தொகையை கட்ட முன்வந்தால் உடனடியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், ரிலையன்ஸ் போன்ற பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டம் என வங்கி விதிகளில் உள்ளதா? இவர்களுக்கு சாதகமாக சட்டம் கொண்டு வரவும் சிலர் உள்ளனர் “ என நீதிபதிகள் வேதனையை வெளிப்படுத்தி வழக்குகளை ஒத்திவைத்தனர்.
– யாழன்