ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் திருமால் அடியார்கள் குழாம்
அமைப்பினர் நடத்திய திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள்
நடை பெறவில்லை என்றும் ஆரியபட்டாள் வாசல் அருகே உள்ள ஆஞ்சநேயர் சிலை மற்றும் பெரிய பெருமாள் சிலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினர்.
இதற்கு உரிய விளக்கம் கேட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செஞ்சி, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த திருமால் அடியார்கள் குழாம் என்ற அமைப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் மூலஸ்தானம் அருகே உள்ள கொடிமரம் கீழ் அமர்ந்து தொடர்ந்து பஜனை மூலம் பாடல்கள் பாடி கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக கோயில் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மனுவாக கோரிக்கை வழங்கினால், உரிய விசாரணை மேற்கொண்டு விளக்கம் தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திடீர் என்று எற்பட்ட முற்றுகை போராட்டத்தால் காவல் துறையினருக்கும் அமைப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் திருக்கோயில் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
—-ம.ஸ்ரீ.மரகதம்