சீசன் தொடங்கியதால் உதகையை பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரம்!

நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை காலம் துவங்கிய நிலையில், நகரை பொலிவுபடுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகைக்கு  ஆண்டுதோறும் ஏப்ரல்,…

நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை காலம் துவங்கிய நிலையில்,
நகரை பொலிவுபடுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும்
சுற்றுலாத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகைக்கு  ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு வரும் சுற்றுலா
பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

உலக பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி
மற்றும் வாசனை திரவிய கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழாக்களை,
மாவட்ட நிர்வாகம் , சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் சார்பில்
நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சி,
வனவிலங்கு மற்றும் பாரம்பரிய சின்னங்கள் நகரில் உள்ள தடுப்புச் சுவர்களில்
ஓவியங்களாக வரையப்பட்டு வருகிறது.

குறிப்பாக சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் ,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே யானை, புலி, மான் மற்றும் வரையாடு
உள்ளிட்ட வன விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டு வருகிறது. இந்த
ஓவியங்கள் , அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து
வருகிறது.

—-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.