கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு மளிகை, காய்கறி மற்றும் அவசர மருத்துவ தேவைக்காக பலரும் வந்து செல்கின்றனர். தற்போது கேரளாவில் கொரோனா…

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவிலிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு மளிகை, காய்கறி மற்றும் அவசர மருத்துவ தேவைக்காக பலரும் வந்து செல்கின்றனர். தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வந்தாலும் கட்டுக்குள் வராமல் தொற்றுப் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், கேரளாவில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கோவைக்கு வரும் முக்கிய வழித்தடங்களான நடுபுனி, கோபாலபுரம் ஆகியவற்றில் அதிகாரிகள் முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத் திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், ஓட்டுநர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.