கொடியேற்றத்துடன் துவங்கிய அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!

அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா வெகுவிமர்சையாக  கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்க்கு சொந்தமான ஶ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் முதல் நாள் திருவிழா ஆண்டுதோறும் மிகவும்…

அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா வெகுவிமர்சையாக  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்க்கு சொந்தமான ஶ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் முதல் நாள் திருவிழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முக்கியத்துவம் வாய்ந்த  திருவிழாவான பொங்கல் திருவிழா ஏப்ரல் நான்காம் தேதியும், பூக்குழி இறங்குதல் ஐந்தாம் தேதியும் நடைபெற உள்ளது. பின்னா் நிறைவாக வரும் 11ம் தேதி ஸ்ரீமுத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் உற்சவ திருவிழா நிறைவடைய உள்ளது.

கொடியேற்ற விழாவை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 10 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பொதுமக்கள் தரிசனம் பெற்றனர்.

—கா. ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.