தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு அந்த கணக்கு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் Southern Railway எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த பக்கத்தில் ரயில் குறித்த புதிய அறிவிப்புகள், தெற்கு ரயில்வேயின் சாதனைகள் குறித்த பதிவுகள் அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். மேலும் ஹேக் செய்யப்பட்ட பக்கத்துடன் ஃபேஸ்புக் கணக்காளர்கள் ஜாலியாக கிண்டல் பதிவுகளை இட்டு உரையாடி வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயின் சமூக வலைதள பக்கம் தொடர்ச்சியாக இயங்கி வரும் முகநூல் கணக்காகும். இதில் ரயில் தொடர்பான முக்கிய அறிவிப்புகள், பயணிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதனை முகநூலில் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தினை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். மேலும், குழந்தையின் கார்ட்டூன் புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்துள்ளனர். மேலும், வியட்நாம் மொழியில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஹேக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்துடன் பிற முகநூல் பயனர்கள் உரையாடி வருகின்றனர். குழந்தைகளை குறித்து தொடர்ச்சியாக எழுதி வரும் எழுத்தாளர் உமாநாத் செல்வன் “உங்க ஊரில் சிறார் இலக்கியம் எல்லாம் எப்படி இருக்கு தம்பி?” என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு தெற்கு ரயில்வேயின் முகநூல் கணக்கிலிருந்து வியட்நாமிஸ் மொழியில் ஹேக்கர்கள் பதில் அளித்துள்ளனர்.

சில முகநூல் பயனர்கள் “உங்க ஊர்ல ரயில் இருக்கா..? “ நீங்க எந்த ஊரு…? நீங்க சாப்டீங்களா?” இது என்னடா தெற்கு ரயில்வேக்கு வந்த சோதனை..? போன்ற கேள்விகளை கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஹேக் செய்யப்பட்ட பக்கத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சகத்தின் உதவியோடு தெற்கு ரயில்வேயின் முகநூல் பக்கம் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது. ஹேக்கர்களின் இணைய தாக்குதலில் இருந்து முழுமையாக கணக்கை மீட்டுள்ளோம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.







