முக்கியச் செய்திகள் குற்றம்

‘அருணா ஜெகதீசன் அறிக்கையைப் பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும்’

தமிழ்நாடு அரசு அருணா ஜெகதீசன் அறிக்கையைப் பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்களைக் காக்கா குருவி சுட்டது போல 14 பேரைச் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வகையில் 16 பேர் மீதும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மகளை இழந்து தன் குடும்பத்தினர் நித்தமும் ரத்த கண்ணீர் வடித்துவருகிறோம் எனத் தெரிவித்த அவர், வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த தனது மகள் ஸ்னோலினை இழந்துவிட்டோம் எனக் கூறினார். மேலும், இதற்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையைத் தடை செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசு அருணா ஜெகதீசன் அறிக்கையைப் பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனக் கோரினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கும் வகையில் 16 பேர் மீதும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முந்தைய அரசிடம் முறையிட்டோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறினார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர், தங்கள் ஆட்சி வந்தால் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார் எனத் தெரிவித்த அவர், துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆடு மாடுகளைப் போலச் சூழ்ச்சி செய்து சுட்டுக்கொண்டவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால், 14 பேரை இழந்தவர்கள் வேதனையுடன் இருக்கிறோம் எனத் தெரிவித்தார். மேலும், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், எத்தனை கோடி இழப்பீடு கிடைத்தாலும் ஈடு செய்ய இயலாது எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘சுருக்கு மடி வலை விவகாரம்; மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்’

தொடர்ந்து பேசிய அவர், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு அறிவித்த நிதி இதுவரை முறையாக வந்து சேரவில்லை. 14 பேர் உயிர் போனதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தின் போது உடலுறுப்புகளை இழந்து இயன்றளவிற்கும் மாற்றுத்திறனாளிகளாகத் துடிக்கும் நபர்களுக்கும் போதிய உதவி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குழந்தைத் திருமண மசோதா – நிலைக்குழு கால அவகாசம் நீட்டிப்பு

Mohan Dass

உலகளவில் முதலில் வந்த ‘கடைசி விவசாயி’

Yuthi

மக்களைப் பிளவுபடுத்துகிறது மோடி அரசு – சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்

Web Editor