அருள்நிதியின் “D ப்ளாக்”: ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருள்நிதியின் “D ப்ளாக்” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக் குழுவினர் அறிவித்துள்ளனர். அருள்நிதி நடிப்பில் 15வது படமாக உருவாகியுள்ள “D ப்ளாக்” திரைப்படத்தை ‘எரும சாணி’ யூடியூப் குழுவின் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.…

அருள்நிதியின் “D ப்ளாக்” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அருள்நிதி நடிப்பில் 15வது படமாக உருவாகியுள்ள “D ப்ளாக்” திரைப்படத்தை ‘எரும சாணி’ யூடியூப் குழுவின் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ரோன் எதன் யோஹனன்  இசையமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக அவந்திகா நடிக்கவுள்ளார். மேலும், கரு.பழனியப்பன், சரண்தீப், தலைவாசல் விஜய், ரமேஷ்கண்ணா, உமா ரியாஷ், விஜய்குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிலையில் , ‘D ப்ளாக்’ வரும் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதே தேதியில், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘திருச்சிற்றம்பலம்’ படமும் வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.