முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

கலை இயக்குநர் அங்கமுத்து சண்முகம் காலமானார்

பிரபல கலை இயக்குநரும் பெப்சி பொதுச்செயலாளருமான அங்கமுத்து சண்முகன் காலமானார்.

கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குநர்களின் படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர் அங்கமுத்து சண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட, முன்னனி கதாநாயர்கள் படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர்.

கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுச்செயலாளராகவும் தொடர்ந்து மூன்று முறை தேர்வாகி பணிபுரிந்து வந்தார்.

புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலமானார். அவர் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

Jeba Arul Robinson

ஏழில் ஒருவருக்கு நீடித்த கொரோனா நோய்த்தொற்று

Halley karthi

செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதித்திருந்த தடை நீக்கம்: கடும் எதிர்ப்பால் நடவடிக்கை!

Halley karthi