முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் -முதலமைச்சர் வாழ்த்து

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா – ரோஹித் தாமோதரன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். இவர் முதல்வன், இந்தியன், சிவாஜி, எந்திரன் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அடுத்து தெலுங்கு ஹீரோ ராம் சரண் தேஜா, இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் நடிக்கும் படங்களை இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அவர்கள் திருமணம் இன்று (27-06-2021) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி இதில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். கொரோனா பெருந்தொற்று குறைந்த பின், திரையுலகினருக்காகத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மணமகன் ரோகித், தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். இவர் மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

Advertisement:
SHARE

Related posts

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!

Jeba Arul Robinson

தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனா பாதித்தால் மரணம் ஏற்படாது; எய்ம்ஸ் தகவல்

Saravana Kumar

சிகரெட் கடன் கொடுக்காததால் நேர்ந்த கொடூரம்

Gayathri Venkatesan