முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள்: சவால் விடுத்த அண்ணாமலை

பொய் வழக்கு போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்க முயற்சி செய்வதாகவும், முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் எனவும் அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு சவால் விடுத்துள்ளார். வடமாநில தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக பாஜக…

பொய் வழக்கு போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்க முயற்சி செய்வதாகவும், முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் எனவும் அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.

வடமாநில தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.

https://twitter.com/annamalai_k/status/1632275259540774916?s=20

பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன். முடிந்தால் என் மீது கை வையுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

https://twitter.com/annamalai_k/status/1632273472427814913?s=20

 

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.