போதையில் நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பயணி : நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

ஆரணியில் அரசு பேருந்தில் போதையிலிருந்த பயணி ஒருவர், டிக்கெட் கேட்ட நடத்துனரின் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சி அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நடுவழியில் நிறுத்தியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து சேத்துப்பட்டு…

ஆரணியில் அரசு பேருந்தில் போதையிலிருந்த பயணி ஒருவர், டிக்கெட் கேட்ட நடத்துனரின் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சி அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நடுவழியில் நிறுத்தியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து சேத்துப்பட்டு நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணித்த பயணி ராஜேந்திரன் என்பவரிடம் நடத்துனர் ஜெயக்குமார் டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். அரசு பேருந்துகளில் பெண்களிடம் நீங்கள் டிக்கெட் வாங்குவதில்லை, ஆண்களிடம் ஏன் டிக்கெட் எடுக்குமாறு தொந்தரவு செய்கிறீர்கள் என்று கூறி நடத்துனர் சற்றும் எதிர்பாராத நிலையில் அவரை கன்னத்தில் அறைந்தார். இச்செயலால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த செயலை கண்டித்து பேருந்து திடீரென நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. பேருந்தில் பயணித்த 40 க்கும் மேற்பட்ட பயணிகள் நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பெரும் அவதிப்பட்டனர்.

தகவல் அறிந்து வந்த ஆரணி காவலர்கள், அந்த பயணியை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கன்னத்தில் அறைந்த பயணி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கினார். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.