ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பெரம்பூரை சேர்ந்த மேலும் ஒருவர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 18-ஆவது நபராக பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ஆம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 18-ஆவது நபராக பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ஆம் தேதி சென்னை, பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம், பூந்தமல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், அஞ்சலை, ஹரிஹரன், சதீஷ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் திருவேங்கடம் என்பவர் கடந்த 7-ஆம் தேதி போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இன்று இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் உறவினர் பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் 18-ஆவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.