முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கிய கார்த்தி

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு அரியலூரைச் சேர்ந்த மாணவர் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் நகரில் வசித்து வரும் கார்த்திக்கின் தந்தை செல்வம் அரசு கலைக் கல்லூரியில் தற்காலிக காவலராக பணியாற்றி வருகிறார். தாய் வளர்மதி வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இருவரின் சொற்ப ஊதியத்தில்தான் குடும்பம் நகர்ந்து வருகிறது. 7ம் வகுப்பு வரை அரியலூரில் உள்ள தூய மேரி மேல்நிலைப்பள்ளியில் படித்தார் கார்த்தி. ஹாக்கி விளையாடுவதில் அவருக்கு இருந்த திறமையைக் கண்ட உடற்கல்வி ஆசிரியர், சென்னையில் உள்ள ஒய்எம்சிஏயில் படிக்க வைக்கக் கூறியுள்ளார்.இதனையடுத்து, 7 முதல் 10ம் வகுப்பு வரை சென்னை ஒய்எம்சிஏவில் படித்துள்ளார்.கார்த்திக்கின் விளையாட்டு திறனை பார்த்த திருச்சி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர், அவருக்கு பயிற்சி அளித்துள்ளார். தற்போது, கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து வரும்.கார்த்தியின் விளையாட்டு திறனை பார்த்த பெங்களூர் சாய் விளையாட்டு மையத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். அங்கு பல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

தற்போது வரும் 23 ஆம் தேதி இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி கார்த்தியின் தாயார் வளர்மதி கூறுகையில், “எனது மகன் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. நாங்கள் கஷ்டப்பட்டாலும் எனது மகன் நல்ல நிலைக்கு வர வேண்டும் என நினைத்தோம்” என்று குறிப்பிட்டார். இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இந்தியாவுக்காக விளையாடி எனது மகன் வென்று வருவான் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஓட்டு வீட்டில் வசித்து வரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் விளையாட்டுக்காக தன்னுடைய விடா முயற்சியில் மற்றும் தன்னுடைய ஆட்டத் திறனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அரியலூர் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதுமுள்ள விளையாட்டு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும்?

உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கும் தேர்தல் ஆணையம்

Ezhilarasan

மே 5ம் தேதி முதல்வராகப் பதவியேற்கும் மமதா பானர்ஜி

Halley Karthik