முக்கியச் செய்திகள்

“தளபதி 66”: வைரலாகி வரும் விஜயின் நியூ லுக்!

“தளபதி 66” திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் வீடியோ கால் பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜயின் 66ஆவது படத்தை எதிர்நோக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குநர் வம்சி. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை தில் ராஜூ இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தில், சரத்குமார், ஷாம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.  இந்நிலையில், இசையமைப்பாளர் தமனும் தான் இப்போது ஃபுல் ஃபார்மில் இருப்பதாகவும், தனது கெரியரிலேயே பெஸ்ட்டான ஆல்பத்தை கொடுக்கப்போவதாகவும் உறுதி அளித்துள்ளார். தளபதி 66 படம் 2023 பொங்கல் அன்று ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியானது. பிரபல நடிகர்களின் பட்டாளம் இப்படத்தில் இணைந்திருப்பது இப்படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் வீடியோ கால் பேசும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. புகைப்படத்தில் உள்ள விஜயின் நியூ லுக்  ரசிகர்களை வாவ் சொல்ல வைத்துள்ளது.

தலைவா உனக்கு மட்டும் எப்படி ஏஜ் ரிவர்ஸ் கியரில் போகுது என்று ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது மகிழ்ச்சியைப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கை வெட்டப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்ட சடலம்; விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு

Halley Karthik

ஏசி வெடித்ததில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகாயம்

Arivazhagan CM

எதிர்க்கட்சிகளை அன்போடு நேசிக்கிறது ஆளுங்கட்சி- ஜி.கே.மணி பேச்சு

Ezhilarasan