570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை…

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 177 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் 19 ஆய்வக நுட்புநர் 2-ம் நிலைக்கான நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, கருணை அடிப்படையில் 21 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகள் வழங்கும் பணியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவத் தேர்வு வாரியத் தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.