முக்கியச் செய்திகள் தமிழகம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர்கள் நியமனம்: உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அறநிலையத் துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும், அறங்காவலர்கள் உள்ள கோயில்களில் அவர்கள் மூலமாகவே நியமிக்கப்பட்டு வருவதாகவும், அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட தக்கார்கள் மூலமாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பவதாக விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டுமென கூறி, அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர். அதேசமயம் அந்த நியமனங்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினர். அர்ச்சகர்கள் நியமிக்க பின்பற்றப்படும் விதிகளை எதிர்த்த வழக்குகளை அடுத்தக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கால்பந்தாட்ட போட்டியின் போது இடிந்து விழுந்த பார்வையாளர் மாடம்

G SaravanaKumar

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: பொன்முடி

EZHILARASAN D

கோவையில் இருந்து நாட்டின் முதல் தனியார் ரயில்!

Web Editor