தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகளை நியமித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையொட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக வடிவேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : சாதனை மேல் சாதனை…!! – 371 நாட்களுக்கு பின் விண்வெளியில் இருந்து பூமி திரும்பிய நபர்
அதேபோன்று, செய்யாறு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு சோமசுந்தரமும், திருவள்ளூர், பூவிருந்தவல்லி, தென்காசி மற்றும் சிவகாசி சுகாதார மாவட்டங்களுக்கு டெங்கு பரவல் கண்காணிப்பு அதிகாரியாக கிருஷ்ணராஜும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.







