ஐஏடி நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 5 முதல் விண்ணப்பம் தொடக்கம் : ஐஐஎஸ்இஆர் அறிவிப்பு………!

இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (IISERs)என்பது உயர்தர அறிவியல் கல்வி மற்றும் அதிநவீன ஆராய்ச்சிக்கு படிப்பை வழங்கும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களாகும். மத்திய கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்ட இந்த பல்கலைகழகங்கள் புனே, கொல்கத்தா, மொஹாலி, திருவனந்தபுரம், போபால், திருப்பதி, பெர்ஹாம்பூர் ஆகிய 7 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இங்கு 5 ஆண்டு பிஎஸ்எம்எஸ், 4 ஆண்டு பிஎஸ், பிடெக் படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிறுவனங்களில் சேர ஐஏடி எனப்படும் பிரத்யேக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

இந்த நிலையில் தற்போது இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு பிளஸ் 2 முடித்தவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகியவற்றில் குறைந்தது 3 பாடங்களைப் படித்திருப்பவர்கள் இந்தத் தேர்வு எழுதத் தகுதியா னவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 13 ஆகும். ஹால் டிக்கெட் மே 24 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மேலும் நுழைவுத் தேர்வு ஜூன் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு https://www.iiseradmission.in/

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.