வாரிசுகள் திறமைசாலியாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம், அதற்கு அடையாளமாக டிவிஎஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது, வாரிசு என்பதனால் அரசியல் பேசுகின்றேன் என என்ன வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சார்பாக டிஎஸ் சீனிவாசன் நூற்றாண்டு விழா சென்னை
கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடை பெற்றது, இதில் தமிழ்நாடு
முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு, மா.சுப்ரமணியன், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் பா. சிதம்பரம், மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிறகு மேடையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது:
டிவிஎஸ் என்ற மூன்றெழுத்து நிறுவனத்தை டிஎம்கே என்ற மூன்றெழுத்தின் தலைவராக வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன். என் தந்தை என்பதை விட நான் தலைவராக போற்றக்கூடிய கலைஞர் அவர்களுக்கும் இதுதான் நூற்றாண்டு. தமிழ்நாட்டின் தொழில் துறை அடையாளங்களில் டிவிஎஸ் முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது மறைக்கவும் முடியாது. தமிழ்நாட்டிற்கு ஒரு தொழில் முகத்தை காட்ட வேண்டும் என்றால் அதற்கு டி வி எஸ் நிறுவனத்தை கட்டலாம். இதற்கு அடித்தளம் அமைத்தவர் டிவிஎஸ் சுந்தரம் அவர்கள்.
இன்றைக்கு லட்சக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் வந்தாலும் ஏழைகளுக்கு வாகனமாக இருந்தது டிவிஎஸ் 50 வாகனம் தான், கிராமப்புறங்களில் முதன்முதலாக சென்ற வாகனம் டிவிஎஸ் வாகனம் தான், வெங்கரம் சுந்தரம் வழக்கறிஞராக இருந்து தொழிலதிபரானவர் அவர். 1912ஆண்டு மதுரையை மையமாகக் கொண்டு பேருந்து சேவை தொடங்கினார். தஞ்சாவூர், புதுக்கோட்டை வழித்தடங்களில் முதன்முதலாக பேருந்து இயக்கினார். இந்த காலத்தில் சரியான சாலை வசதி இல்லாத போதிலும், சாலை போடும் டெண்டர் எடுத்தார், சாலைகளில் மாட்டு லாடம் அதிகம் இருக்கும் என்பதால் காந்த வாகனத்தையும் வைத்திருந்தார்.
இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வந்தது, உடனே
கரிவாயு மூலம் வாகனத்தை இயக்கக்கூடிய பங்கை வைத்தார். இன்று 80 நாடுகளில் டிவிஎஸ் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது, இத்தகைய மாமனிதர் தொழில் துறையிலும் தனது வாரிசுகளை ஈடுபடுத்தி வளர்த்திருக்கிறார். தாத்தா பேரன் கொள்ளு பேரன் என்ற மூன்றெழுத்து நிறுவனத்தை காப்பாற்றி வருகிறார்கள்.
வாரிசுகள் திறமைசாலியாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம், அதற்கு அடையாளமாக டிவிஎஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது, வாரிசு என்பதனால் அரசியல் பேசுகின்றேன் என என்ன வேண்டாம், வாரிசு திறமையாக இருந்தால் எதையும் சிறப்பாக செய்து வெற்றி கொடி நாட்டலாம் என்று தான் நான் சொன்னேன்,
தொழிலதிபரில் பல வகை உண்டு, சிலருக்கு நிர்வாகத் திறன் இருக்கும், பிறருக்கு
ஆற்றல் அதிகமாக இருக்கும், சில நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வார்கள்,
சிலர் புதுமைகளை புகுத்துவார்கள், இது அனைத்தையும் ஒன்று சேர்ந்தவராக டி எஸ்
சீனிவாசன் இருந்துள்ளார். அப்பாவோட நிறுவனமாக இருந்தாலும் இதில் அவர் சர்வீஸ் மேனேஜராக தான் சேர்ந்தார். பிறகு சர்வீஸ் முதலாளியாகவே பணிபுரிந்தார்.
எல்லோரும் தனக்கு தெரிந்த தொழில் ரகசியத்தை வெளியே சொல்ல மாட்டாங்க, ஆனால் எல்லோருக்கும் கற்பிக்கக் கூடிய ஒருவராக டி எஸ் சீனிவாசன் இருந்துள்ளார். தேவை துறையாக இருந்த நிறுவனத்தை உற்பத்தி நிறுவனமாக மாற்றினார். சென்னை பாடி அருகே 300 ஏக்கர் நிலம் வாங்கினார் அப்போது அவரை சிலர் தடுத்தார்கள். ஆனால் 25 ஆண்டுகளுக்கு பிறகு அது தேவைப்படும் என அப்போதே தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு இருக்கிறார். சைக்கிள் போல ஒவ்வொரு வீட்டிலும் மொபட் இருக்க வேண்டும் என்று சாதித்து காட்டியவர் அவர்தான்.
துணிச்சலாக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்,தொழிலாளர்களுடன் தொழிலாளராக
இருந்துள்ளார். அவரின் நலனில் அக்கறை கொண்டவராக விளங்கினார். காந்தியவாதியாக வாழ்ந்துள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்டவராக
இருந்துள்ளார். இளம் வயதில் கணவரை இழந்த தன் மகளுக்கு மறுமணம் செய்து
வைத்துள்ளார். இப்பவும் சிலர் குழந்தை திருமணத்தை பச்சையாக ஆதரித்தும்,
மறுமணம் செய்வதற்கு மந்திரம் சொல்லக்கூடாது என்கிற காலகட்டத்தில் 60
ஆண்டுகளுக்கு முன்பாகவே முற்போக்காக சிந்தித்தவர் டிவிஎஸ் சுந்தரம்.
தலை சிறந்த மருத்துவரா, சட்டமன்ற உறுப்பினரா இங்கு அவருக்கு ஒரு புத்தகம்
வெளியிடப்பட்டுள்ளது. வருமானம் வளர்ச்சி மற்றும் பெருக்காமல் ஒரு படி மேலே சென்று பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதரணமாக டிவிஎஸ் இருந்துள்ளது,
ஓசூரில் தொழில் தொடங்கும் போது அங்கு ஒரு குளத்தை வெட்டி உள்ளார்கள், அங்கு
ஒரு நாரை தண்ணீர் பருக வந்துள்ளது, மேலும் பல்லுயிர் பெருக மரங்களை நட்டு
உள்ளார்கள், 20 ஆண்டுகளில் ஓசூரில் ஒரு காட்டை டி வி எஸ் நிறுவனம்
உருவாக்கியுள்ளார்கள். அதை இந்த புத்தகத்தில் ஆவண படுத்தி உள்ளார்கள்.
எஸ் எஸ் டி அறக்கட்டளை மூலமாக 2500 க்கு மேற்பட்ட கிராமத்தை தத்து எடுத்து
வளத்து வருகிறார்கள். குழந்தை, பெண்களின் வளர்ச்சி, கல்வி அவற்றிற்கு பெரும்
உதவியாக இருந்து வருகிறீர்கள். இதேபோன்று அனைத்து நிறுவனங்களும் கிராமப்புறங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்,
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்று
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தேன். வேணு சீனிவாசன் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் இருவரும் இந்த தலைமை பொறுப்பை ஏற்று உள்ளார்கள். இதற்கு கொடையாக தற்போது 150 கோடி ரூபாய் வந்துள்ளது. எங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலில் பாராட்டியவர் வேணு சீனிவாசன் தான்.
இயற்கை பேரிடர் காலத்தில் நிறைய உதவி செய்துள்ளீர்கள், கொரோனா களத்தில் நிறைய உதவி செய்துள்ளீர்கள். தமிழ்நாடு தொழில் துறை அதிக அளவில் முன்னேறி வருகிறது. நிறையதொழில் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய வருகிறார்கள். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த விலுக்காட்டில், 10% தமிழ்நாடு இருக்கிறது,
2024 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த இருக்கிறோம்,இது வரை இதுபோன்ற யாருமே நடத்தவில்லை என்ற அளவுக்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். டிவிஎஸ் இதில் கலந்துகொண்டு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
டிவிஎஸ் போன்ற பல துறைகள் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும், வேணு சீனிவாசனை போன்ற பல தொழில் அதிபர்கள் நமக்கு தேவை என கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.







