சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள்: எந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையம்?…

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல தமிழகம் முழுவதும் நவம்பர் 9ம் தேதிமுதல் 16 ஆயிரத்து 895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று…

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல தமிழகம் முழுவதும் நவம்பர் 9ம் தேதிமுதல் 16 ஆயிரத்து 895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, மயிலாடுதுறை, அரியலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கே.கே.நகரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், சிதம்பரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சை செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலை, பண்ருட்டி, காட்டுமன்னார் கோவில், புதுச்சேரி செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது

பூந்தமல்லியில் இருந்து வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மூன்று நாட்களும் சென்னையில் இருந்து, 10 ஆயிரத்து 975 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 5 ஆயிரத்து 920 பேருந்துகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 895 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதேபோல், தீபாவளி பண்டிகை முடிந்த பின், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு நவம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்களும் 13 ஆயிரத்து 292 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.