சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிரைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதனைத்தொடர்ந்து தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. முதலில் பேசிய பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தார். இதனைத் தொடர்ந்து பேசிய பாமக எம்.எல்.ஏ செளமியா அன்புமணி, மஜக எம்.எல்.ஏ தமுமின் அன்சாரி, திமுக எம்.எல்.ஏ முத்துராஜ, சிபிஐ எம்.எல்.ஏ டி.ராமச்சந்திரன், சிபிஐ(எம்) எம்.எல்.ஏ ஆர்.செல்லசாமி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீர்மானத்தை ஆதரித்து பேசினர்.

இதனைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எதிரோஉ எதுவும் இல்லாததால் நீட் எதிர்ப்ப தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.