என்ற பெயரில் சென்னை மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு – DRUG FREE TAMIL NADU – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வருகு தந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார். அவரை பின்பற்றி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் போதைப் பொருள் விழிப்புணர்வு காணொளி ஒளி பரப்பப்பட்டது. மேலும், தமிழ்நாடு முழுவதும் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிக்கும் நிகழ்வு முதலமைச்சர் விஜய் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தை தடுப்பதில் சிறப்பாக பணி செய்த 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார். மேலும் பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றத்தில் சிரப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பருசுகள் வழங்கப்பட்டது.




