“தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தனித் தீர்மானம் இயற்றிய அரசை தமிழ் உலகம் பாராட்டுகிறது!” – வைரமுத்து

சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தனித் தீர்மானம் இயற்றிய தமிழ்நாட்டரசை தமிழ் உலகம் பாராட்டுகிறது என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட் சட்டப்பேரவையைல் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 2-வது நாள் விவாதம் தொடங்குவதற்கு முன்பு, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூற்இயிருப்பதாவது,

“சட்டமன்றத்தில்
தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்
தனித் தீர்மானம் இயற்றிய
தமிழ்நாட்டரசையும்
ஒருதுளி மறுப்புமின்றி
ஒருமனதாக
நிறைவேற்றிக்கொடுத்த
அனைத்துக் கட்சித்
தலைவர்களையும்
பரந்துபட்ட தமிழ் உலகம்
பாராட்டுகிறது;
எழுந்துநின்று நன்றி சொல்கிறது

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது
வெறும் சொற்கூட்டமல்ல;
அது
புவியியல், வரலாறு,
பீடு, பெருமிதம்
அனைத்தும் கொண்ட
இனத்தின் குறியீடாகும்

தேசிய கீதத்தின் அளவுக்குத்
தமிழ்த்தாய் வாழ்த்தைத்
தமிழர்கள் அனைவரும்
மனப்பாடம் செய்யவில்லை

பள்ளியிலிருந்தே அது
மனப்பாடப் பொருளாக
மாற்றப்பட வேண்டும்

மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர்
முன்மொழிந்ததைப் போலவே
அது சட்டமாகவும்
இயற்றப்பட வேண்டும்

தமிழ்த்தாயே!

உன்னைச்
செயல் மறந்து மட்டுமல்ல
செயல் புரிந்தும் வாழ்த்துவோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.