ஆரணியில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி!

திருவண்ணாமலையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. போதைப்பொருள்களை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  பல விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ,…

திருவண்ணாமலையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

போதைப்பொருள்களை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  பல விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் , திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்,  ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பாக தடுப்பு போதைப்பொருள்  மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நீதிபதிகள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.  மேலும் இந்நிகழ்ச்சியில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.

பேரணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். போதைப்பொருள்  தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதைப் பொருள்
தடுப்பு குறித்த வாசகங்களை எழுப்பி,  ஆரணி நீதிமன்ற வளாகத்தில் துவங்கி ஆரணி
பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சாலை வழியாகச் சென்று மார்க்கெட் வீதி,  அண்ணா
சாலை வழியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.