அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்ட நிலையில் தற்போது தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள தகவலில், “முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிரான புகாரின் அடிப்படையில், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
சென்னையில் 14 இடங்களிலும், வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் கர்நாடகா மாநிலத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கமணி, அவரது மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்தைவிட அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, “திமுக அரசு எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுவருகிறது.” என முன்னாள் அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சிவி சண்முகம் சமீபத்தில் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.