“பாமக பொறுப்பாளர்கள் காசுக்காக மயங்கக் கூடாது”-ராமதாஸ்

பாமக பொறுப்பாளர்கள் காசுக்காக மயங்கக் கூடாது என அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருக்கோவிலூர், விக்ரவாண்டி சார்ந்த பாமக நிர்வாகிகள் கூட்டம் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ்…

பாமக பொறுப்பாளர்கள் காசுக்காக மயங்கக் கூடாது என அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருக்கோவிலூர், விக்ரவாண்டி சார்ந்த பாமக நிர்வாகிகள் கூட்டம் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ்

சட்டப்பேரவை தேர்தலின்போது, உள் ஒதுக்கீடு கிடைத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம் என அதிமுகவுக்கு நிபந்தனை வைத்ததால்தான், 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த இட ஒதுக்கீடு சட்டமாக்குவதற்கு முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறிய அவர், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளதால், அதற்கு விரைவில் தடை உத்தரவு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழகத்தில் எந்தக் கட்சித் தலைவர்களும் மக்களுக்காக அதிக அறிக்கை வெளியிடாத நேரத்தில் மக்களுக்காக அதிக அறிக்கை வெளியிட்ட ஒரே கட்சி பாமகதான்.

FILE

காசுதான் கடவுள் என்பது கடவுளுக்கே தெரியும். இனி நாம் காசுக்கு மயங்க கூடாது. குறிப்பாக பொறுப்பாளர்கள் காசுக்காக மயங்கக் கூடாது. வாக்குகள் சிந்தாமல் பெற திண்ணைப் பிரச்சாரம், சமூக ஊடகப் பிரச்சாரம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இனி இங்கு காசுக்கு வேலை இல்லை.

நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் பாமக விழுப்புரத்தில் 42 வார்டுகளிலும் போட்டியிட உள்ளதால் பாமகவினர் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நான் கோலூன்றி நடந்தாலும் என்  இறுதி மூச்சு உள்ளவரை இந்த மக்களுக்காக பாடுபடுவேன்”. என்று ராமதாஸ் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.