கே.ஜி.எப்பை தொடர்ந்து கன்னட சினிமாவின் மற்றொரு புயல்; தமிழுக்கும் வருகிறது காந்தாரா!

கன்னட மொழியில் ஆக்‌ஷன் த்ரில்லராக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள காந்தரா திரைப்படம், தமிழ் டப்பிங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எப்., கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்…

கன்னட மொழியில் ஆக்‌ஷன் த்ரில்லராக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள காந்தரா திரைப்படம், தமிழ் டப்பிங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எப்., கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 30ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற வருகிறது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். அவருடன் கிஷோர், அச்யூத் குமார், பிரமோத் ஷெட்டி, ஷாலினி குரு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் இந்தியில் அக்டோபர் 14-ஆம் தேதியும், தெலுங்கு டப்பிங் அக்டோபர் 15ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் காந்தாரா படத்தை டப்பிங் செய்து வெளியிடப்படும் எனப் படக்குழு கூறியிருந்த நிலையில் தற்போது படத்தின் ட்ர்ரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் தமிழ் டப்பிங்கில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. படம் வெளியான நாளிலிருந்தே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கைப்போடி போடும் இப்படம் தமிழில் வெளியாகவுள்ளதால் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியை காந்தாரா படம் பெற்றிருப்பதால் அதனை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப் படத்தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள காந்தாரா படத்தின் தமிழ் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.