அரியலூரில் அக்னி நட்சத்திரத்தில் மழை பெய்ய வேண்டி விநாயகரை சுற்றி கண்ணாடி தொட்டி அமைத்து பன்னீரில் சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்கள் வேண்டுதல்.
அக்னி நட்சத்திரத்தில் அரியலூரில் மழை வேண்டி, சின்ன கடைத் தெருவில் உள்ள பால பிரசன்ன சக்தி விநாயகர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக அப்பகுதியில் அமைந்துள்ளது. இரண்டு அடி உயரம் உடைய, பால பிரசன்ன சக்தி விநாயகர் சிலையை சுற்றி கண்ணாடித் தொட்டி அமைத்து அதில் பன்னீர் மற்றும் வெட்டி வேர் போட்டு செயற்கையான நீரூற்று அமைத்து தொடர்ந்து விநாயகருக்கு பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘ஆசிய கோப்பையில் விளையாட தீப்பெட்டி தொழிலாளி மகன் தேர்வு’
கடந்த 3 நாட்களாக பால பிரசன்ன சக்தி விநாயகருக்கு அபிஷேகம் இதுபோல் செய்யப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரத்திலிருந்து பாதுகாத்து, குளிர்ச்சியான சூழ்நிலை உருவாக வேண்டும், மழை பெய்ய வேண்டும் போன்ற வேண்டுதலுக்காக இது போல் செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதுபோல் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொண்டு வருவதாகவும், மழை பெய்தவுடன் அதனை எடுத்துவிடுவதாகவும் தெரிவிக்கும் விழா ஏற்பாட்டாளர்கள். மக்கள் மகிழ்ச்சியுடன் விநாயகரை வணங்கி வேண்டி வருகிவதாக தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








