முக்கியச் செய்திகள் தமிழகம்

அன்னூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது – ஆ.ராசா உறுதி

அன்னூர் தொழிற்பேட்டைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என திமுக எம்.பி ஆ.ராசா விவசாயிகளை சந்தித்து உறுதியளித்தார்.

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் 3731ஏக்கர்
விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.  இதற்கு அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இது சம்பந்தமாக விவசாயிகள் நமது நிலம் நமதே என குழு ஒருங்கிணைந்து பல கட்ட
போராட்டங்களை நடத்தினர் விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக,பா.ஜா.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து தமிழக அரசு அன்னூரில் அமைய உள்ள தொழில்பேட்டைக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்த படாது ஏற்கனவே அங்குள்ள தனியார் நிறுவனங்களின் இடங்கள் மட்டுமே அமையும் என அறிவிப்பு வெளியிட்டது. இதனை ஏற்காத விளையாட்டுகள் தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் போராட்ட குழுவினருடன் நீலகிரி எம்.பி ஆ.ராசா தமிழக அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தனி அறையில் போராட்ட குழு தலைவர் குமார ரவிக்குமார், செயலாளர் ரவி உள்ளிட்ட
குழுவினருடன் அரை மனி நேரத்திற்கு மேலாக நடைப்பெற்ற பேச்சு வார்த்தையில்
காரசார பேச்சு வார்த்தை நடந்தது. இதனையடுத்து வெளியே வந்த ராசா விவசாயிகளிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,  அன்னூரில் தொழில் பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்த ப்பட மாட்டாது என உறுதி அளித்த நிலையில் இங்குதனியாருக்கு சொந்தமான815ஏக்கரில் மட்டுமே தொழில் பூங்கா அமைக்கப்படும்
அதுவும் தண்ணீர்,நிலம் , சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உள்ள தொழிற்சாலைக்கு
மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறினார்.

மேலும் இங்கு ராணுவ தளவாடங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையே
அதிகம் இருக்கும் என கூறிய ராசா விவசாயிகளை ஒருங்கிணைத்து எம்.பி,எம்.எல்.ஏ,ஆட்சியர் உள்ளடக்கிய குழு ஏற்படுத்தப்பட்டு அந்த குழு ஒப்புதல் அளிக்கும் தொழிற்சாலை மே வரும் என உறுதி அளித்து சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

என்னாச்சு? மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!

Halley Karthik

ஹார்டுவேர்ஸ் கடையில் நள்ளிரவில் நேரிட்ட பயங்கர தீ விபத்து! – பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

Nandhakumar

அரசு பள்ளியில் படித்த 87 மாணவர்கள் ஐஐடி யில் படிக்க தேர்வு: அமைச்சர் பெருமிதம்

EZHILARASAN D