அண்ணாமலையார் கோவில் திருவூடல் திருவிழா: அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருவூடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு சிவதாண்டவம் ஆடி சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருவூடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு சிவதாண்டவம் ஆடி சாமி தரிசனம் செய்தனர்.

நினைத்தாலே முக்தி தரும் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அடுத்தபடியாக மிக முக்கிய விழா என்றால் அது இந்த திருவூடல் திருவிழாவாகும்.

தைமாதம் மாட்டுப் பொங்கலையொட்டி நேற்று திருவூடல் திருவிழா வெகு விமரிசையாக
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

தை மாதம் இரண்டாம் நாளான நேற்று திருவண்ணாமலையில் உள்ள திருவூடல் வீதியில்
அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுடன் ஊடல் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. அப்போது அண்ணாமலையார் கோசுகோட்டி நடனமாடி ஊடல் நிகழ்வானது நடைபெற்றது. இந்த திருவூடல் கணவன்-மனைவிக்கு இடையே நடைபெறும் ஊடலை விளக்கும் விதமாகநடைபெற்றது.

இந்த நிகழ்வின் பின்னணியானது, பிருங்கி மகரிஷி முக்தி அடைவதற்கு அண்ணாமலையார் நேரில் காட்சியளித்து முக்தி அளிக்க விரும்புவதால் தான் சென்று காட்சி அளிக்க போவதாக அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனிடம் கூறுகின்றார் .
இதற்கு அம்மன், முனிவர் தன்னை வணங்காமல் உங்களை மட்டுமே வணங்குகிறார் ஆகையால்நீங்கள் சென்று அவருக்கு காட்சியளித்து முக்தி அடைய செய்யக்கூடாது என்று
கூறுவதால் இருவருக்குமிடையே ஊடல் ஏற்படுகின்றது.

இந்த ஊடல் நிகழ்ச்சி இரவு 8 மணி அளவில் தொடங்கி சுமார் 2 மணி நேரம்
நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் தனியாக சென்று பிருங்கி மகரிஷிக்குகாட்சி அளிக்க சென்றதால் கோபம்கொண்ட உண்ணாமுலையம்மன் ஊடல் கொண்டு திருமஞ்சனகோபுரம் வழியாக தனியே கோவிலுக்கு சென்றார். பின்னர் தன்னையே வணங்கி வந்தபிருங்கி மகரிஷிக்கு அண்ணாமலையார் தனியாக சென்று காட்சியளித்து கிரிவலம்வருவார்.

இந்த திருவூடல் விழாவினை கண்டு சாமி தரிசனம் செய்தால் மறு உடல் இல்லை என்பது
ஐதீகம் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு
அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கம் இட்டதுடன் சிவதாண்டவம் ஆடி மாடவீதிகளில் தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் திருக்கோவில் மறு ஊடல் நிகழ்வு இன்று நடைபெறும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.