முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்செந்தூரில் இருந்து ஏப்.14ல் நடைபயணத்தை தொடங்குகிறார் அண்ணாமலை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் இருந்து நடைபயணத்தை தொடங்குவதாக இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக மாநில மேலிட பார்வையாளர் சி.டி.ரவி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

இந்த செயற்குழு கூட்டத்தில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரும் ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் இருந்து நடைபயணத்தை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், ராமர் பாலம் பாதிக்காத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் – ஆட்சியர்களுக்கு புதிய உத்தரவு

EZHILARASAN D

மாநகர பேருந்துகளின் 2 பக்கங்களிலும் விளம்பரம்- போக்குவரத்துறை

G SaravanaKumar

மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையம்

Arivazhagan Chinnasamy