’அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது’ – முத்தரசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ஒரே நாடு, ஒரே கட்சி என்பதை பாஜக கொண்டு வர நினைக்கின்றனர். நாட்டு மக்களால் நிராகரிக்கப்படுகிற ஆட்சியாக மத்திய அரசு உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் ஆணைய தலைவரே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தர்மம் என்பது மிக முக்கியம். கூட்டணி தர்மத்தின் படி, காங்கிரஸ் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் வேட்பாளர் வெற்றியை உறுதி செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்தும் செய்யும். திமுக கூட்டணியை எதிர்த்து அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது” என்று தெரிவித்தார்.

அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த முத்தரசன், அதிமுக கூட்டணி தற்போது முழுமையாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. அதிமுக தற்போது 4 பிரிவாக உள்ளது என்று கூறினார். மேலும், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தம் செய்ய வழியுறுத்தி ஜனவரி 24 ம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.