மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் கருத்திற்கு அதிமுக நிர்வாகிகள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் ஓபிஎஸ் ஆதாரவாளர் புகழேந்தி இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்பொழுது அவர் பேசியதாவது:
அண்ணாமலைக்கு வயதும், அனுபவமும் போதாது மத்திய அரசு ஆதரவும், போலீஸ் பாதுகாப்பும் இருக்கிறது என்ற காரணத்தால் தைரியமாக பேச கூடாது. ஜெயலலிதாவை பற்றி பேசிவிட்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை நினைத்தால் ஓட ஓட விரட்டப்படுவார், ஜெயலலிதா குறித்து பேசி பெண்களின் எதிர்ப்பை அவர் சம்பாதித்து விட்டார் என்று கூறினார்.
மேலும் அண்ணாமலைக்கு எதிரான அதிமுக தீர்மானம் குறித்து பேசிய புகழேந்தி எதற்காக எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் போடுகிறார் நேரடியாக கூட்டணி இல்லை என்று அறிவிக்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பினர்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயிலுக்கு சென்றார் என குஷ்பூ சொல்கிறார். ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு குஷ்பூவிற்கு தகுதியே கிடையாது. திரை உலகில் மீண்டும் குஷ்பூ கால் வைக்க முடியாது அங்கு ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் ஏராளமானவர் உள்ளனர் என தெரிவித்தார்.
ரெ.வீரம்மாதேவி







