குடும்ப ஆட்சி செய்வதில், மக்களை ஏமாற்றுவதில் தமிழக முதல்வர் நம்பர் ஒன் -அண்ணாமலை

ஊழல் செய்வதில், பொய் சொல்வதில், குடும்ப ஆட்சி செய்வதில், மக்களை ஏமாற்றுவதில் தமிழக முதல்வர் நம்பர் ஒன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை…

ஊழல் செய்வதில், பொய் சொல்வதில், குடும்ப ஆட்சி செய்வதில், மக்களை
ஏமாற்றுவதில் தமிழக முதல்வர் நம்பர் ஒன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை பேசும்போது, 2024 தேர்தலில் கோவை, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளில் இரண்டு வெற்றி வேட்பாளர்களை கொடுக்க இருக்கிறது என்பதற்கான அச்சாரமாக இந்த கூட்டம்
இருக்கிறது. பாராளுமன்ற கோட்டையை போல இந்த அலங்காரம் இருக்கிறது. லகிரி, கோவையிலிருந்து பாராளுமன்றத்திற்கு செல்வது பாஜகவிற்கு புதிதல்ல. 1998, மற்றும் 99ல் பாஜகவிற்கு வாக்களித்து கோவையிலிருந்து பாஜக எம்.பி.யை அனுப்பி வைத்துள்ளீர்கள். இது புதிது என்றால் உலகத்தில் கூடிய அனைத்து நாடுகளுமே தேங்கி இருக்க கூடிய சூழ்நிலையில் ஏழு சதவீதம் பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி பாதையில் இருக்கிறது என பேசினார்.

மேலும், இந்தியாவில் உள்ள பெரிய நகரங்கள் அனைத்தும் வளர்ச்சி பாதையில் இருக்கிறது ஆனால் கோவை,திருப்பூர் , நீலகிரி மாவட்டங்கள் பிரதமர் மோடியை பிடித்து கொண்டு வளர்ந்திருக்கிறது என்றால் இல்லை என தான் கூறுவேன் என தெரிவித்தார்.


அத்துடன், நீலகிரியில் உள்ள கூடலூரில் சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளாக மருத்துவமனை இல்லை. பிரதமர் மோடி மருத்துவகல்லூரி,மருத்துவமனை வழங கியிருப்பதாகவும் ,கோவை நீலகிரியில் பாஜகவுக்கு எம்பி இல்லை என்றாலும் கூட பிரதமர் மோடி வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  என்னதான் வாரிக்கொடுத்தாலும் கூட வந்து மக்களுக்கு தர மக்கள் சேவகனாக இருந்து சேர்க்க ஒரு எம்.பி தேவைபடுகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை தற்போதுள்ள எம்பி 2 ஜி வழக்கில் குற்றவாளியாக
இருந்து ஊழலுக்கு பெயர் போனவர். கடந்த வாரம் அவரது பினாமி பெயரில்
இருந்த 55 ஏக்கர் சொத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது என்பதை குறிப்பிட
அண்ணாமலை, ஆடிக்கு ஒருவாட்டி அமாவாசைக்கு ஒரு வாட்டி என எட்டிப் பார்த்து
நீலகிரியில் கூடிய மக்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு எந்த விதமான தீர்வும்
கிடைக்கவில்லை. நீலகிரி தொகுதியில் வனவிலங்கு பிரச்சனை, தேயிலை தொழிலாளர்கள் பிரச்சனை, டேன்டீ பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சினைகள் நீலகிரி தொகுதியில் இருக்கிறது ஆனால் தீர்வு இல்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், நீலகிரியில் இருந்து வந்தவர்களுக்கு தெரியும் பாஜக நல்ல கட்சி, பிரதமர் மோடி
நல்லவர். டெல்லியில் நல்ல ஆட்சி நடக்கிறது. ஆனால் உள்ளூர் எம்.பி, எம்.எல்.ஏ
இருந்திருந்தால் மோடி கொடுக்கின்ற திட்டங்கள் லட்டாக வந்து கிடைக்கும் என்பது
அவர்களுக்கு தெரியும். 2024 அதை சரி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மேலும்,  திமுக ஆட்சி வந்த பிறகு மிகவும் புறக்கணிக்கபட்ட பகுதி கொங்கு பகுதி. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பது ஒரு காலம்.  ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோன தடுப்பூசி போடுவதிலும் கூட அரசியல் செய்தனர். 2021 கொங்கு பகுதிக்கு வரக்கூடிய கொரோனா தடுப்பூசி கூட குறைத்தது. எங்கேயோ நிலம் இருக்கிறது அதை விடுத்து கோவை அன்னூரில் 3500 ஏக்கர் விவசாய நிலத்தை எடுக்க வேண்டுமென வந்துள்ளனர். பாஜக போராட்டம் செய்து அதையும் நிறுத்தி வைத்துள்ளது. திமுகவிற்கு கொங்கு பகுதியின் மீது ஒரு கண் இருக்கிறது.கொங்கு பகுதியில் திமுக எதை எடுத்து செல்லலாம் என நினைக்கிறது. எதை கொடுத்து செல்லலாம் என பாஜக நினைக்கிறது என தெரிவித்தார்.

மேலும்,  திமுக ஆட்சியைக் கடந்த 18 மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது பட்டத்து இளவரசருக்கான ஆட்சி.நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பட்டத்து உதயநிதி நிகழ்ச்சிக்காக குழந்தைகளை நேரு ஸ்டேடியத்தில் மூன்று மணி நேரம் காக்க
வைத்தனர். கோவை மாநகர் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.இந்த நகரம்
இருப்பது திமுக குடும்பத்திற்கு சேவகம் செய்ய வேண்டும் என அமைச்சர்கள்
நினைக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நமது உரிமைகளையும்பறித்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.


கடந்த வருடம் பொங்கல் தொகுப்பில் ஆடம்பரமாக கொடுத்த திமுக அரசு இந்த வருடம்
அரிசியை சர்க்கரையை மட்டும் தருகிறார்கள். போன வருடம் கரும்பு வெல்லம் கொடுத்த அரசு இந்த வருடம் தரவில்லை. போன தேர்தலில் பனைவெல்லம், ஐந்தாயிரம் ரூபாய் தருவோம் எனக் கூறியவர்கள். தற்போது ஆளுங்கட்சியாக இருந்த போதும் ஆயிரம் ரூபாய் தருகிறார்கள் என தெரிவித்தார்.

ஊழல்செய்வதில், பொய் சொல்வதில்,குடும்ப ஆட்சி செய்வதில், மக்களை ஏமாற்றுவதில்
தமிழகம் முதல்வர் நெம்பர் ஒன் எனவும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நெம்பர்
ஒன் முதல்வர் என போஸ்டர்களை தொண்டர்கள் ஒட்டி வருகின்றனர். எந்த தைரியத்தில் 40ம் நமது என்ற கனவில் முதல்வர் அமர்ந்திருக்கிறார். வரும் தேர்தலில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நானூறு எம்பிக்களுக்கு மேல் பெற்று ஆட்சியில் அமரப் போகிறார். இந்த முறை தமிழக பாஜக சார்பில் 25 எம்.பிகளுக்கு மேல் பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம் என தெரிவித்தார்.

அத்துடன், அந்த எம்.பிக்களில் சிலரை அமைச்சர்களாக்கி தமிழகத்துக்கு வேலை செய்வதற்காக மோடி அனுப்புவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழுக்கு என்ன செய்ய வேண்டும் தமிழ்நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என பிரதமர் துடித்து கொண்டிருக்கும் போது,  நமக்கு என்ன வேண்டும் என்று பிரதமருக்கு தெரியும் எனவும் அப்போது அண்ணாமலை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.