தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க அவ்வளவு தூரம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் பொறுமையாக இருப்போம் அவ்வளவு தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு பாஜகவின் மருத்துவப் பிரிவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். மாநிலம் முழுவதும் இருந்து பாஜக மருத்துவ பிரிவு நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 300 மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்சியில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உலக நாடுகளின் கவனம் என்பது இந்தியாவின் மீது முற்றிலுமாக மாறி இருக்கிறது.
தோராயமாக 1 பில்லியன் மக்கள் தொகையில் 3.5 பத்திரிக்கையாளர்கள்
கொல்லப்படுகிறார்கள். அமெரிக்காவை விட பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க கூடிய நாடு இந்தியா தான். ஆனால் உலகத்தில் உள்ள பல நாடுகள் இந்தியாவை அவமதிக்க வேண்டியே, பத்திரிக்கையாளர்கள் குறித்த தவறான தரவுகளை கொடுத்து வருகின்றனர்.
வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியாவில் இருப்பவர்கள் எல்லாம் பட்டினியாக இருக்கிறார்கள் என தவறாக எழுதி வருகிறார்கள். பட்டினிச் சாவு என்பதை கூர்மையாக பார்த்தீர்கள் என்றால் அதனை நான்கு வகையாக பிரிக்கலாம். குறைவான உணவு, குறைவான உயரம், அதிகப்படியான பருமன், அதிகப்படியான இறப்பு என பிரிக்கலாம். இவை அனைத்தும் 135 கோடி மக்கள் தொகைக்கு, 3000 மக்களிடம் மட்டுமே சர்வே எடுத்து தீர்மானித்து முடிவு எழுதி இருக்கின்றனர்.
இந்தியா 116வது இடத்தில் இருந்து 101 வது இடத்தில் உள்ளது என இந்த சர்வேவை
மையமாக வைத்து அறிவித்துள்ளனர். இதனை இந்திய ஊடகங்கள் எடுத்து, மோடி ஆட்சியில் இதுபோல நடக்கிறது. இந்தியா பட்டினியில் முன்னேறி இருக்கிறது என விமர்சித்து வருகிறார்கள். உலக நாடுகளுக்கு எல்லாம் நம் இந்தியாவை பார்த்து பயம்
வந்துவிட்டது. அவர்கள் அஞ்சுகிறார்கள். தென் ஆப்ரிக்கா நம்மை விட 10 மடங்கு
பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிறார்கள்.
இந்த வருடம் தென் ஆப்ரிக்காவின் வளர்ச்சி என்பது 0.5 சதவிதம் மட்டுமே. ஆனால் இந்தியா மட்டும் 7% வளர்ச்சி அடைந்துள்ளது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை எழுப்பியுள்ளது. இந்த வளர்ச்சி என்பது சாதாரணமாக நடக்கவில்லை. ஒரு அரசு போட்ட விதையினால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே இந்தியாவின் வளர்ச்சியை குறித்து அமைச்சர் பியூஸ் கோயல், இந்தியா 2040 வரும் பொழுது, இந்தியாவின் வளர்ச்சி 16 ட்ரில்லியன் வளர்ச்சியாக மாறும் என சொல்கிறார்.
பல்வேறு இடங்களில் தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று
வருகிறது. கடந்த தேர்தலை காட்டிலும் இது 35% வளர்ச்சி ஆகும். இதுவரை நமது
வரலாற்றில் நாம் எவ்வளவு வெற்றி பெற்றுள்ளோமோ, அதை விட 10 சீட்டுகள் மேலும்
கூடுதலாக நாம் வெற்றி பெறுவோம். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் ஒரு கட்சி 2வது முறையாக வெற்றி பெற்றதே இல்லை என சொல்கிறார்கள். ஆனால் இந்த முறை நாம் வெற்றி பெறுவோம். கடந்த ஒன்றரை வருடங்களாக மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போது welcome modi என்ற ட்வீட் வருகிறது. நம் மக்கள் நம் ஆட்சியை பார்ப்பது மாறி விட்டது.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க அவ்வளவு தூரம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் பொறுமையாக இருப்போம் அவ்வளவு தான்! நீட் வந்ததன் பிறகு எத்தனை பேர் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு சென்று மருத்துவர்கள் ஆகி இருக்கிறார்கள். எத்தணை பேரின் குடும்பம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது என பாருங்கள். திமுக நீட் மூலமாக பட்டதாரி ஆனவர்களின் தரவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா??
நான் பத்தாவது படித்த பின்னர் என் அப்பா கேட்டார், கண்ணு நீ டாக்டர் ஆகுறியா
என, எனக்கு அதெல்லாம் செட் ஆகாது என நான் சொல்லி விட்டேன். ஒருவர் டாக்டர் ஆக
வேண்டும் என்றால் அது அவரது விருப்பத்தை பொறுத்து தான் அமையும். ஆனால் திமுக
எல்லோரும் டாக்டர் ஆக வேண்டும் என சொல்லிக்கொண்டே இருக்கிறது, அது தரத்தை
பொறுத்தது. எல்லோரும் டாக்டர் ஆனால் பின்பு ஊசி போட்டு கொள்வது நாங்கள்
தான். தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும், அதனால் தான் நுழைவு தேர்வு என்ற ஒன்று இருக்கிறது!
ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவ கல்லூரி திறக்க வேண்டும் என்பது மோடி வந்ததன்
பிறகு தான் சாத்தியமானது. நீட் தேர்வு ஒளிவு மறைவு இன்றி நடத்தப்படுகிறது. இதனால் தான் ஒரு இருளர் சமுதாயத்தை சேர்ந்த மாணவி மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.